கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலில் காமெடி நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் உவரியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், நேற்று மாலை சூட்டிங் முடிந்தவுடன் இரவு 8 மணி அளவில் பகவதி அம்மன் கோயிலுக்கு வந்தார்.
அங்கு அம்மனை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த போது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவருடன் சேர்ந்து செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.