சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் ராமதாஸ், டாஸ்மாக் பணியாளர்கள் முன் நெடுஞ்சான் கிடையாக விழுந்து டாஸ்மாக் கடையை மூடுமாறு கேட்டுக்கொண்டார்.
முத்துநாய்கன்பட்டியில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உள்ள அந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கடந்தமாதம் அருள் ராமதாஸ் தலைமையில் பொதுமக்கள் 5,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மாதத்தில் கடையை மூடுவதாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு மாதமாகியும் மூடப்படாததால் அப்பகுதி பெண்களுடன் அங்கு சென்ற அருள் ராமதாஸ், கடையை இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.