ஓசில வந்தா கண்டதையும் தூக்கிட்டு வந்துருவியா என்று தன்மானத்தை துண்டிய அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகர் மீது போலீசில் புகார் அளித்து மூதாட்டி பதிலடி கொடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் விராலிமாயன்பட்டியில் அரசு பேருந்தில் மூதாட்டிக்கு இலவச பயணம் என்ற நிலையில், அவர் கொண்டு வந்த வெண்டைக்காய் மூட்டைக்கு லக்கேஜ் கட்டணமாக 15 ரூபாயை கறாராக பெற்றுள்ளார் நடத்துனர்.
அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் சுப்பிரமணியனோ, மூட்டை 50 கிலோ எடையிருக்கும் என கூறி லக்கேஜ் கட்டணமாக 50 ரூபாய் வசூலித்ததுடன், ஓசியில் பயணம் செய்தால் கண்டதையும் கொண்டு வருவாயா? என மூதாட்டியை கேட்டதாக கூறப்படுகிறது.
மனவேதனையடைந்த மூதாட்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் எடையை சரிபார்த்தபோது வெண்டைக்காய் மூட்டை 24 கிலோ இருந்துள்ளது. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க போக்குவரத்து கழகத்துக்கு பரிந்துரைப்பதாக மூதாட்டியிடம் தெரிவித்துள்ளனர்.