செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் அ.தி.மு.க. நிர்வாகி செந்தில்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கொண்ட கூலிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி மர்மகும்பல் ஒன்று அவரை சரமாரியாகஅரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.
இந்தக் கொலை வழக்கில் ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த அவரது உறவினரான விஜயலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கூடுவாஞ்சேரியில் பதுங்கியிருந்த 6 பேரை தற்போது போலீசார் கைது செய்தனர்.