வரும் 9ம் தேதி இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 10,11ம் தேதிகளில் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் அது புயலாக வலுப்பெறுமா என்பது குறித்து தொடர்ந்து கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.