தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் கர்ப்பிணிகளுக்கான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மகப்பேறு பிரிவில் படுக்கை வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், துர்நாற்றமும் வீசி வருவதாகவும், இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.