தென்காசி மாவட்டம் மாம்பழந்துறை பகுதிக்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள், ஒற்றை யானையை பார்த்து கூச்சலிட்டதால், கோபமடைந்த யானை, ஜீப்பை விரட்டிய வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
நெடுமாங்காடு பகுதியில் இருந்து ரப்பர் தோட்ட பணிக்கு சென்ற தொழிலாளர்கள், யானையை பார்த்து கூச்சலிட்டனர்.
வன விலங்குகளை அச்சுறுத்தும் வகையில், பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.