முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு, ஐ. பெரியசாமி, ராஜகண்ணப்பன், பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.