கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தீக்குச்சிகள் கொண்டு சுமார் 6 அடி நீளத்திற்கு சார்லி சாப்ளின் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அருமனை மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்த ஸ்ரீ ராஜ், சிறுவயதில் இருந்தே பல்வேறு வடிவங்களில் ஓவியக்கலையை நேர்த்தியாக வெளிப்படுத்தி வருகிறார்.
கலை பயணத்தில் தமிழக அரசின் வளர்மணி விருதை பெற்ற ஸ்ரீராஜ் தனது வண்ண ஓவியங்களிலும், பென்சில் படங்களிலும் உயிரோட்டத்துடன் காட்சி தரும்படி தீட்டியுள்ளார்.