பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசுப் பள்ளிகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தமிழ்நாடு சொசைட்டி நிறுவனம் சார்பில் அரசு பள்ளிகளுக்கு சத்துணவு திட்டத்திற்காக முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த பத்து நாட்களாக விநியோகம் செய்யப்பட்ட முட்டைகள் துர்நாற்றத்துடன் கூடிய அழுகிய நிலையில் இருந்ததாகவும், அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.