நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெண்கள் அறிவகம் கல்லூரிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட பிஎஃப்ஐ, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்கு துணைபோவதாகவும் கூறி சட்டவிரோத இயக்கமாக அறிவித்து தடை விதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் அந்த அமைப்புடன் தொடர்புடைய அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மீனாட்சிபுரத்தில் இயங்கி வந்த பிஎஃப்ஐ பெண்கள் அறிவகம் என்ற மதரஸா கல்லூரியில், கடந்த மாதம் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது வருவாய்த்துறையினரால் சீல்வைக்கப்பட்டுள்ளது.