கோவையில் நடந்தது சிலிண்டர் வெடிப்பு அல்ல வெடிகுண்டு சம்பவம் எனத்தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைக்க 4 நாட்கள் ஆனது ஏன்? அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அந்த சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் என்றும் அதை அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிடமுடியாது என்றும் கூறினார். மேலும், தமிழக காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட நிச்சயம் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.