தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 30 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
கருங்கடல் கிராமத்தில் கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோவிலுக்கு சொந்தமான 67 ஏக்கர் நிலத்தை, அந்த பகுதியை சேர்ந்த 5 பேர் குத்தகைக்கு எடுத்து விட்டு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக, அறநிலையத்துறைக்கு குத்தகை பணம் செலுத்தாமல் விவசாயம் செய்து வந்துள்ளனர்.
புகாரின் பேரில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சங்கர் தலைமையிலான குழுவினர், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.