இலங்கை தேவாலய குண்டுவெடிப்பில் கைதான முகமது அசாருதீனை, கேரள சிறையில் சந்தித்ததாக, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான ஃபெரோஸ் வாக்குமூலம் அளித்துள்ளான்.
இவ்வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதலில் கைது செய்யப்பட்ட 5 பேரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 15ம் நாள் இலங்கை தேவாலய பயங்கரவாத செயலில் ஈடுபட்டோருடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட முகமது அசாருதீனையும், ரசித் அலி என்பவரையும் கேரள சிறைக்கு சென்று சந்தித்ததாக, பெரோஸ் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.