காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் குடிநீர் குழாயை அகற்றாமலேயே, கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளதால், குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்து, சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
2-வது வார்டில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் சாலையோரம் உள்ள குடிநீர் குழாய்களை அப்புறப்படுத்தாமல், குடிநீர் குழாயுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே சம்பத்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.