புதுக்கோட்டையில் பேன்சி ஸ்டோருக்குள் புகுந்து, தேர்தல் முன்பகை காரணமாக, ஊழியரை தாக்கிய மர்ம நபர்கள் குறித்து, சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியார் நகரில் பாலமுருகன் என்பவர் நடத்தி வரும் பேன்சி ஸ்டோரில் கோபாலகிருஷ்ணன் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது நகர்மன்ற உறுப்பினராக உள்ளவருக்கு எதிராக, தேர்தலில் போட்டியிட்ட நபருக்கு, ஆதரவாக, வேலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பேன்சி ஸ்டோருக்குள் புகுந்த 5-ற்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் கோபாலகிருஷ்ணனை தாக்கினர்.
இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.