கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
பண்ணைகளுக்கு வரும் வாகனங்கள், கிருமி நாசினி தெளித்த பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
கோழிகளுக்கு முறையாக தடுப்பூசி போடப்பட்டு, உயிர் பாதுகாப்பு முறை கடைபிடிக்கப்பட்டு வருவதால், இங்கு பறவைக்காய்ச்சல் பரவ வாய்ப்பில்லை என பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.