காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகாலில், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான வழித்தடங்கள் இன்றி அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
36-வது வார்டு உட்பட்ட மேட்டுத் தெருவில் 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக மூடியுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அவ்வாறு, சாலையோரம் போடப்பட்டுள்ள இந்த மழைநீர் வடிகாலில் மழைநீர் வடிவதற்கான எவ்வித ஜாடிகள் ஏதும் அமைக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.