சேலத்தில் நகைக்கடையில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடி விற்று ஆன்லைன் சூதாட்டம் ஆடி பணத்தை இழந்துள்ளார்.
பள்ளப்பட்டியில் ஏவிஆர் ஸ்வர்ணக் கடையில் தீபக் என்பவர் செயின் செக்சனில் 10 வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நகைகள் சரி பார்க்கப்பட்ட போது குறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் தீபக் சிறுக சிறுக 40லட்சம் ரூபாய் மதிப்புள்ள 680 கிராம் நகைகளை திருடி அதனை வங்கிகள் மற்றும் நகை அடகு கடைகளில் விற்று இருப்பதாக கூறப்படுகிறது.