மதுபான கொள்முதல்-விற்பனையில் கமிஷன் பெறுவதாக பேசியதாக 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக்கோரி தமிழக பாஜக நிர்வாகிக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அண்மையில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பாஜக ஐ.டி.பிரிவு தலைவர் நிர்மல்குமார், டாஸ்மாக் மதுபான கொள்முதல் குறித்தும், சட்டவிரோதமான மதுவிற்பனை குறித்தும் பேசியிருந்தார்.
இதற்கு அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தனது டிவிட்டர் பக்கத்திலும் நிர்மல்குமார் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், எவ்வித அடிப்படை ஆதாரம் இல்லாமல் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.