கோவை கார் வெடிப்பு வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படும் என்றும், அவர்களின் விசாரணையில் மேலும் ஆதாரங்கள் கிடைத்தால் கைது நடவடிக்கை இருக்கும் என்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியபின் பேட்டியளித்த அவர், என்.ஐ.ஏ. விசாரணைக்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும், ஏராளமான ஆதாரங்கள் கிடைத்த நிலையில், அதன் விவரங்களை வெளியிட முடியாது என்றும் கூறினார்.