கோவை உக்கடத்தில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டுமென்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திலுள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு இன்று தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசு அதிகாரிகள், விரைவில் விசாரணையை தேசிய அமைப்பு தன் வசம் எடுத்து கொள்ளும் என்று கூறியுள்ளனர்.