கோவை உக்கடத்தில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே காரில் சிலிண்டர் வெடித்ததில் அதிலிருந்த நபர் பலியானார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.
இதையேற்று மத்திய உள்துறை அமைச்சகம், என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை புரசைவாக்கத்தில் காவல்நிலைய அந்தஸ்து அளிக்கப்பட்ட என்ஐஏ கிளை அலுவலகத்தில் முதல் வழக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கு முன் தமிழகம் தொடர்பான வழக்கு, கொச்சின் மற்றும் டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.