கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே தமிழக அரசுக்கு மத்திய உளவுத்துறை அமைப்புகள், அச்சுறுத்தல் தொடர்பான எச்சரிக்கைகள் விடுத்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என்.ஐ.ஏ. விசாரணை நடைபெற்ற 2019ஆம் ஆண்டு முதலே ஜமேசா முபினை தமிழக போலீசார் கண்காணித்து வந்ததாக டிவிட்டரில் பதிவிட்ட அவர், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அவை நிறுத்தப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அரசியல் அழுத்தங்கள் காரணமாக குறிப்பிட்ட நபர்கள் கண்காணிக்கப்படவில்லையா? என்றும் இது தொடர்பாக முதலமைச்சர் பதிலளிப்பாரா? என்றும் அண்ணாமலை வினவியுள்ளார்.