நாகர்கோவில் அருகே, இலவச டிக்கெட் கேட்டு, பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து, நடத்துனரை தாக்கியbUயை, போலீசார் கைது செய்தனர்.
நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட அரசுப்பேருந்தில், மாங்குளம் பகுதியில் ஏறிய போதை ஆசாமி, காட்டுப்புதூருக்கு டிக்கெட் கேட்டு வாங்கியுள்ளார்.
பணம் தராமல், இலவச டிக்கெட் வேண்டும் என கூறிய போதை ஆசாமி,பேருந்து காட்டுபுதூருக்கு வந்தபோது, நடத்துனரிடம் மீண்டும் வம்பிழுத்துள்ளார்.
பேருந்தின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகளை கல்வீசி உடைத்துள்ளார்.
மேலும் அங்கு நின்றிருந்த மற்றொரு பேருந்தின் நடத்துனர் ஜனார்த்தனன் என்பவரிடம் தகராறு செய்து, அவரை கட்டையால் தாக்கியதோடு, அந்தப் பேருந்தின் கண்ணாடிகளையும் உடைத்ததாக கூறப்படுகிறது.