மதுரை மாவட்டம் மேலூர் அருகே, மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவன்-மனைவி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆண்டிகோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பசாமிக்கு, அதே ஊரைச்சேர்ந்த மழுவேந்தி மற்றும் ராஜதுரையுடன் கண்மாயில் மீன் பிடிக்கும்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த கருப்பசாமி, அவரது மனைவி செல்வி ஆகியோரை, இரண்டு பேரும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு, தப்பியுள்ளனர்.
ராஜதுரை மட்டும் கைதான நிலையில், மழுவேந்தியை போலீசார் தேடிவருகின்றனர்.