ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் கேளிக்கை விடுதியின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கு, தலா 27 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை ரங்கநாதன், நவீன் குமார், திருமலை ஆகிய 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தது தொடர்பாக, விடுதி மேலாளர் மற்றும் ஒப்பந்ததாரரை கைது செய்த போலீசார், உரிமையாளர் சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலாளர்கள் உயிரிழந்த இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட தேசிய தாழ்த்தப்பட்ட ஆணைய துணை தலைவர், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு விடுதி நிறுவனம் சார்பில் 15 லட்சம் ரூபாய், தமிழக ஆதிதிராவிட நல வாரியம் சார்பில் 12 லட்சம் ரூபாய் என மொத்தம் 27 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
மேலும் இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான ஆணையும் வழங்கினார்.