4 கோடி ரூபாய் கடன் தருவதாகக்கூறி, குழந்தைகள் விளையாடும் கள்ள ரூபாய் நோட்டுகளை வைத்து, பொன்னுசாமி ஹோட்டல் உரிமையாளிடம் மோசடியில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான புகாரில், தனது தொழிலை மேம்படுத்த 4 கோடி ரூபாய் கடன் பெற முயன்றபோது, தனது நண்பர் மூலம் ஹரிஷ் ஆச்சார்யா என்பவரின் அறிமுகம் கிடைத்ததாகவும், அவர் கேட்ட பணத்தை வாங்கித்தருவதாக உறுதியளித்ததாகவும், பொன்னுசாமி ஹோட்டல் உரிமையாளர் பொன்னுசாமி தெரிவித்தார்.
இதையடுத்து, முத்திரைத் தாள் வாங்க வேண்டும் என ஹரிஷ் கேட்டதை நம்பி, 4 லட்ச ரூபாய் அளித்த நிலையில், அப்பணத்துடன் அவர் தலைமறைவானதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த போலீசார், செல்போன் சிக்னல், சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் கோவையில் ஹரிஷை கைது செய்தனர்.
விசாரணையில், கள்ள நோட்டுகள் மீது உண்மையான சில ரூபாய் நோட்டுகளை வைத்து ஏமாற்றியதாகவும், இதே பாணியில் பல தொழிலதிபர்களை ஏமாற்ற திட்டமிட்டிருந்ததாகவும் ஹரிஷ் கூறினார்.