சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் துணி பண்டல் குடோனில் பட்டாசு விழுந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணி பண்டல்கள் எரிந்து நாசமாயின.
அதுல்பட் என்பவர் ராமலிங்கம் மடாலயம் தெருவில் அடுக்குமாடி கட்டிடத்தில் துணி பண்டல்களை அடுக்கி வைத்து குடோனாகப் பயன்படுத்தி வந்துள்ளார். நேற்றிரவு 7 மணி அளவில் பட்டாசு தீப்பொறி ஒன்று இந்த துணி பண்டல் குடோனில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் துணி பண்டல்கள் தீ பற்றி கொளுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்