இன்று நிகழும் சூரிய கிரகணத்தின் போது, தமிழகத்தில் 8 சதவீதப் பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாக காட்சியளிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது சூரியனை சந்திரன் மறைப்பதால் சூரிய கிரகணம் நிகழ்கிறது.
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.19 மணிக்குத் தொடங்கி, 6.32 மணி வரை சூரிய கிரகணம் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் தெற்குப்பகுதி, கஜகஸ்தான், சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தைக் காண முடியும்.