கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த பொறியியல் பட்டதாரியான ஜமேசா முபினின் வீட்டில், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொட்டாசியம் நைட்ரேட் போன்ற ரசாயனப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணை குறித்து பேட்டியளித்த அவர், சிலிண்டர்கள் எங்கிருந்து வந்தன என்பதை கண்டுபிடித்துள்ளதாக கூறினார்.
ஜமேசா முபீன் செல்போனிற்கு வந்த அழைப்புகள் குறித்தும், அவருடன் தொடர்புடையவர்களிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் டி.ஜி.பி. தெரிவித்தார்.