ஆந்திராவின் புத்தூர் சுங்கச்சாவடி அருகே, தேர்வெழுதிவிட்டுத் திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி பேரணி சென்ற நாம் தமிழர் கட்சியனரை, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர்.