திருச்சியில் காதலி பேசுவதை தவிர்த்ததால் ஆத்திரமடைந்த காதலன், அவரின் ஆண் நண்பரை தாக்கியது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்த கார்த்தியும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், மாணவி, தனியார் பேருந்து ஓட்டுநர் நாகேஷ்வரனுடன் நட்பாக பழக தொடங்கியதை அடுத்து, கார்த்தியிடம் பேசுவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி, தனது நண்பர்களுடன் சென்று, பேருந்தை வழிமறித்து நாகேஷ்வரனை தாக்கியதுடன், பேருந்து கண்ணாடிகளையும் உடைத்துள்ளார்.
இதனையடுத்து, கார்த்தி மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.