கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகே தொலையா வட்டத்தில் நகைக்கடையில் கத்தியுடன் புகுந்த முதியவர் கண்ணாடிகளை உடைத்து நகையை திருடிச் சென்றுவிட்டார்.
மரியதாஸ் என்பவரின் நகைக்கடையில் இந்த திருட்டு நடந்துள்ளது. நேற்று இரவு 7 மணி அளவில் ரெத்தினவேல் என்ற முதியவர் வெட்டுக் கத்தியுடன் கடைக்குள் நுழைந்து கண்ணாடி பேழைகளை உடைத்து நகைகளை எடுத்துச் சென்றுவிட்டார்.
சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலிஸ் விசாரணை மேற்கொண்டு உள்ளது. கடை உரிமையாளர் மரியதாஸுக்கு சிதறிக்கிடந்த கண்ணாடி துண்டுகளால் காயம் ஏற்பட்டு விட்டது. அவர்அளித்த புகாரின் பேரில் போலீசார் ரெத்தினவேலை தேடி வருகின்றனர்.