தீபாவளி திருநாளை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பல லட்சம் பேர் கார்களில் புறப்பட்டதால் தேசிய நெடுஞ்சாலைகள் நிரம்பி வழிந்தன.
சென்னை- திருச்சி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. செங்கற்பட்டுக்கு முன் உள்ள பரனுர் சாவடியை கடப்பதற்கு பதினைந்து நிமிடத்திற்கு மேல் ஆனது.
மேலும் வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடந்த இரண்டு நாட்களில் பேருந்துகள் மூலம் மூன்று லட்சம் பேர் பயணம் செய்து இருக்கின்றனர்.
ரயில்களில் பயணம் செய்வதற்கு முன் கூட்டியே பதிவு செய்யும் முறை இருந்தாலும் கூட, கடைசி நேரத்தில் இடம் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் பல ஆயிரம் பேர் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம போன்ற ரயில் நிலையங்களுக்கு வந்திருந்தனர்.