தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நிச்சயம் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அளித்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர்களுக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு சேர்த்து கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.