சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக சார்பில் இன்று நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்கட்சித் துணைத்தலைவராக பேரவையில் அங்கீகரிக்காததைக் கண்டித்து இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிகோரி அதிமுக சார்பில் சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.