மதுரை சித்திரைத்தெருவில் உள்ள காட்டேஜ் எம்போரியம் என்ற கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்து 3 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரகசிய தகவலின் பேரில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், உரிய ஆவணங்களின்றி மாடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிவ பார்வதி, பெண் உருவ கல் சிலை மற்றும் புத்தர் சிலைகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கடை உரிமையாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.