புதுக்கோட்டையில் சிறுதானிய வகை மாவுகளை கொண்டு தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், பாரம்பரிய உணவுகள் இளைய தலைமுறைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், வரகு, திணை, குதிரைவாலி, கம்பு கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களில் மாவு தயாரிக்கப்பட்டு பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
சுத்தமான கடலை எண்ணெயில் நாட்டுச்சக்கரை பனை கருப்பட்டி கொண்டு இனிப்புகளும், இளைய தலைமுறைக்கு பிடித்த வகையில் தூய மல்லி முறுக்கு, மாப்பிள்ளை சம்பா முறுக்கு, ராகி லட்டு, கம்பு லட்டு, திணை லட்டு, பாசிப் பயறு லட்டு, வரகு மிக்சர் , லட்டு போன்றவை தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.