கோவையில் போலீஸ் சந்தேகிக்காதவாறு, வெல்டராக வேலை பார்த்துக்கொண்டே கஞ்சா சாக்லேட் விற்ற வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சரவணப்பட்டியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஹிந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு சாக்லேட் கவர் கிடைத்துள்ளது.
அதை வைத்து துப்பு துலக்கிய போலீசார், சரவணப்பட்டியில் வட மாநிலத்தவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதை கண்டுபிடித்தனர்.
பின்னர், வாடிக்கையாளர் போன்று அணுகிய போலீசார், கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசாவைச் சேர்ந்த சங்கர் கிலால் என்பவனை சுற்றி வளைத்து பிடித்தனர்.
800 கஞ்சா சாக்லேட்டுகள், 390 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.