திருவண்ணாமலையில் பெண்ணிடம் சங்கிலிப்பறிப்பில் ஈடுபட்டவனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
வேங்கிக்கால் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்ற போது அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். கஞ்சா போதையிலிருந்த அவனை பொதுமக்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து வந்த போலீசார் மாலை ஆறு மணிக்கு மேல் குற்றவாளிகளை காவல்நிலையத்தில் வைத்திருக்கக்கூடாது என்று அந்த நபரிடம் விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.