நீலகிரி மலை ரயிலுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட டீசல் என்ஜின், மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை சோதனை ஓட்டம் விடப்பட்டது.
ஏற்கனவே ஃபர்னஸ் எண்ணெய் மூலம் இயக்கப்பட்ட என்ஜின் சேவையில் அதிக புகை எழும்புவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து உள்நாட்டு தொழில் நுட்பத்துடன் புதிய என்ஜின் 9 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு லாரி மூலம் என்ஜின் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு, சோதனை ஓட்டமாக ஹில்குரோ ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது.