இரட்டை குழந்தை விவகாரத்தில் நயன்தாரா - விக்னேஸ்சிவன் தம்பதி, அரசின் விதிமுறைகளை மீறி இருக்கிறார்களா என்பது குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவ மனையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியனிடம், நயன்விக்கி வாடகைத்தாய் விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பபட்டது.
அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது எனவும், டிஎம்எஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
கருமுட்டை மற்றும் வாடகை தாய் விதிமுறைகளை நயன் விக்கி ஜோடி மீறியுள்ளதா என்று அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்வார்கள், அதன் பின் அறிக்கை சமர்பிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதன் பிறகு தேவைப்பட்டால் நயன் விக்கி யிடம் விளக்கம் கேட்கபப்படும் எனவும் இதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் பரிசீலிப்பார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.