செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

போலீசுக்கு தெரியாமல் சடலத்தை மறைத்த நவ ஜீவன் மருத்துவமனை..! ரூ 3 லட்சம் அபராதம் விதிப்பு

Oct 11, 2022 03:09:36 PM

தீமிதி திருவிழாவில் காயமடைந்து 35 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்று உயிரிழந்த இளைஞரை, போலீசுக்கு தெரியாமல் தகனம் செய்ய வைத்ததோடு, இறப்புச்சான்றித்ழ கொடுக்காமல் இழுத்தடித்த திருவாரூர் தஞ்சை சாலையில் உள்ள நவஜீவன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாகத்திற்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த செருவலூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் . இவரது மகன் விக்னேஷ் . ((spl gfx in))கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ந்தேதி தென்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி விழாவில் தவறி விழுந்து தீக்காயம் அடைந்து திருவாரூர் தஞ்சை சாலையில் உள்ள நவஜீவன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து 35 நாட்கள் தீக்காய சிகிச்சை பிரிவில் இருந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்னேஷின் உடலை பிரேத பரிசோதனை செய்து விட்டதாகவும் நன்னிலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து விட்டதாகவும் பொய்யாக கூறி உடலை உடனடியாக எரியூட்ட செய்துள்ளனர்.

இறப்புச் சான்றிதழ் மற்றும் டிஷ்சார்ஜ் சம்மரி மருத்துவமனையில் கட்டப்பட்ட கட்டணத்திற்கான பில் ஆகியவற்றை விக்னேஷின் பெற்றோர் கேட்ட போது அலைக்கழித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக விக்னேஷின் தந்தை திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, விக்னேஷ் தங்களது மருத்துவமனையில் இறக்கவில்லை என்றும் கடந்த 2017 ஆம் ஆண்டு மேமாதம் 25ந் தேதி அவரது உடலை பெற்றோர் வேறு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று விட்டதாக அந்த ஊரைச் சேர்ந்த ஆறு பேர் கையொப்பமிட்டு கொடுத்துள்ளதாகவும் கூறி கேஷ் ஷீட் ஒன்றையும், விக்னேஷின் பெற்றோர் தங்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகையான 86,451 ரூபாயை வழங்காத நிலையில், அந்த தொகையை நவஜீவன் மருத்துவமனை தலைவர் கார்த்திகேயனே செலுத்தியதாகுவும் நீதிமன்றத்தில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கிய மாவட்ட குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, லட்சுமணன் அடங்கிய அமர்வு, விக்னேஷுக்கு சுமார் 35 நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரியப்படுத்தாமலும் சிகிச்சையளித்ததற்கான கேஷ் ஷீட் டிஸ்சார்ஜ் சம்மரி ஆகியவற்றை பத்திரமாக வைத்திருக்காமலும் அதனை பெற்றோருக்கு வழங்காமல் இருப்பதிலிருந்தும் விக்னேஷ் மருத்துவமனையிலேயே உயிரிழந்திருப்பார் என கருதுவதாக தெரிவித்தனர்.

விக்னேஷின் பெற்றோரை அலைக்கழித்து, மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டம் ஏற்படுத்திய குற்றத்திற்காக நவ ஜீவன் மருத்துவமனை நிர்வாகம் 3 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், வழக்கு செலவிற்கு கூடுதலாக 10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட ஆணையம், விக்னேஷின் இறப்பு குறித்து முறையாக சான்று வழங்கி அவரது மகன் விக்னேஷ் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கும் வழிவகை செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டது.


Advertisement
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
15 இரும்பு சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் உண்ட பள்ளி மாணவன்
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
காரைக்குடி விமான நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்
நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement