சேலத்தில், 7 கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
மணியனூரைச் சேர்ந்த திவாகர், வைஷ்ணவி தம்பதியர், அதிநவீன ஆடை வடிவமைப்பு எந்திரங்கள் வாங்கித்தருவதாகவும், தையல் ஆர்டர்கள் பெற்றுத்தருவதாகவும் கூறி சுமார் 200 பேரிடமிருந்து 7 கோடி ரூபாய் வரை பணம் வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக திவாகர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வைஷ்ணவி ஓராண்டிற்கு மேலாக தலைமறைவாக இருந்தார்.
தற்போது திவாகர் ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில், தலைமறைவாக இருந்த வைஷ்ணவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பொறிவைத்து பிடித்து சிறையில் அடைத்தனர்.