தீபாவளியை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர் செல்ல, தமிழகம் முழுவதும் வரும் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 16 ஆயிரத்து 888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம்,பூவிருந்தவல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து, இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
கோயம்பேட்டில் இருந்து, பிற 4 பேருந்து நிலையங்களுக்கு, 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் புகாரளிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண்களை அமைச்சர் அறிவித்தார்.