கோவையில், சிறுவர்கள் விளையாட்டிற்கு பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகளை வைத்து பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி பகுதியில், மர்ம கும்பல் ஒன்று மோசடியில் ஈடுபடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில் கட்டுக்கட்டாக குழந்தைகள் விளையாடும் சில்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா என அச்சிடப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள் 9 அட்டைபெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக மூவரை கைது செய்த போலீசார், இரு இருடிய கலசங்கள், லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.