நெல்லை மாவட்டம் உவரி அருகே, தனியார் மினி பஸ் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய நிலையில், ராக்கெட் ராஜா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாக்குதலை யாரேனும் நடத்தினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவ்வலடியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி பஸ் மீது, நேற்று இரவு சிலர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, தப்பியோடிவிட்டனர்.
இதில் இருக்கைகள் தீப்பிடித்து எரிந்ததை கண்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
சாமிதுரை என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமானநிலையத்தில் போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இத்தாக்குதல் நடைபெற்றதா அல்லது தொழில் போட்டியில் யாரேனும் தாக்குதல் நடத்தினார்களா ? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.