சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த சபாநாயகர் அப்பாவு, மறைந்த எம்.எல்.ஏ.க்கள், பிரபலமானவர்களின் இரங்கல் குறிப்பு அக்டோபர் 17ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்டு அன்றைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்படும் என்றார்.
அதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்தும், துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதங்களை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதும் குறித்தும் முடிவெடுக்கப்படும் என அப்பாவு கூறினார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கை குறித்து சட்டப்பேரவை மரபுப்படி முடிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார்.
சட்டமன்ற கூட்டத்தொடரை முழுமையான நேரலையாக ஒளிபரப்புவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அப்பாவு கூறினார்.