சேலத்திலிருந்து எடப்பாடி நோக்கிச் சென்ற அரசுப்பேருந்திற்கு வழி விடாமல், சாலையில் குறுக்கும் நெடுக்குமாக காரை செலுத்திய நபரால் பேருந்து பயணிகள் எரிச்சலடைந்தனர்.
பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்தபடி வந்த கார் ஓட்டுநரிடம் நடத்துநர் சமாதானம் பேசியதை தொடர்ந்து அவர் பேருந்துக்கு வழிவிட்டார். மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த கார் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.